கையில் கோப்பை..  கிளாமர் காஸ்ட்யூம்.. அமலாபால் பிறந்த நாள் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,October 26 2024]

நடிகை அமலாபால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பர்த்டே பேபி அமலா பாலுடன் லஞ்ச் சாப்பிட்டதாக அவரது கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அமலா பால் மற்றும் தேசாய் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலா பாலுக்கு குழந்தை பிறந்தது. அமலாபால் தன்னுடைய குழந்தையின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் நிலையில் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் அவர், தனது கணவருடன் லஞ்ச் சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில், அவர் கையில் கோப்பையுடன், கிளாமர் உடையுடனும் விதவிதமான உணவுகள் முன்பாக உள்ளார்; இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட இந்த புகைப்படத்திற்கு, ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக, கிளாமர் டிரஸ்ஸை தவிர்க்கவும் என்ற அறிவுரைகளும் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை அமலாபால் நடித்த மலையாள திரைப்படம் ‘லெவல் கிராஸ்’ சமீபத்தில் நல்ல வரவேற்புடன் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது, அவர் மற்றொரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்; அந்த படமும் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

More News

கவனிக்க வேண்டியது விளையாட்டை அல்ல.. விளையாடுபவர்களின் யுக்தியை: விஜய் சேதுபதி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 19 நாட்கள் முடிவடைந்து, இன்று 20வட்ஜி நாள் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. இன்றைய எபிசோடின்

கும்மியடி கும்மியடி.. வருங்கால கணவரை கட்டிப்பிடித்து ரொமான்ஸ்.. ரம்யா பாண்டியன் வீடியோ..!

நடிகை ரம்யா பாண்டியன் திருமணம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், வருங்கால கணவருடன் அவர் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா? பெரிய ஆச்சரியமில்லை..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு விஜய் சேதுபதியின் எபிசோடுகள் கூடுதல் விறுவிறுப்பை தருகின்றன

மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.. விஜய் அறிக்கை..!

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த தளபதி விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டை நாளை நடத்த இருக்கின்ற நிலையில்

அஜித்தின் பல படங்களில் பணி புரிந்துள்ளேன்.. அர்ஜுன் தாஸ் கூறிய ஆச்சரிய தகவல்...!

அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி' படத்தில் அர்ஜுன் தாஸ் ஒரு முக்கிய நடித்து வரும் நிலையில், ஏற்கனவே அஜித் நடித்த பல படங்களில் நான் பணியாற்றியுள்ளேன். "வீரம்" படத்தின் டீசரை ஆன்லைனில் வெளியிட்டது