close
Choose your channels

கையில் கோப்பை..  கிளாமர் காஸ்ட்யூம்.. அமலாபால் பிறந்த நாள் புகைப்படங்கள்..!

Saturday, October 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலாபால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் "பர்த்டே பேபி" அமலா பாலுடன் லஞ்ச் சாப்பிட்டதாக அவரது கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அமலா பால் மற்றும் தேசாய் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலா பாலுக்கு குழந்தை பிறந்தது. அமலாபால் தன்னுடைய குழந்தையின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் நிலையில் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் அவர், தனது கணவருடன் லஞ்ச் சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில், அவர் கையில் கோப்பையுடன், கிளாமர் உடையுடனும் விதவிதமான உணவுகள் முன்பாக உள்ளார்; இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட இந்த புகைப்படத்திற்கு, ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக, "கிளாமர் டிரஸ்ஸை தவிர்க்கவும்" என்ற அறிவுரைகளும் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை அமலாபால் நடித்த மலையாள திரைப்படம் ‘லெவல் கிராஸ்’ சமீபத்தில் நல்ல வரவேற்புடன் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது, அவர் மற்றொரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்; அந்த படமும் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment