பர்த்தேட ஸ்பெஷல்… நடிகை அமலாபாலின் வேறலெவல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,October 28 2021]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை அமலாபால். “மைனா“ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான இவர் அதற்குப் பின்பு “தெய்வத் திருமகள்“, “தலைவா“, “வேலையில்லா பட்டதாரி“ போன்ற பல ஹிட் படங்களில் நடித்திருந்தார்.

சிறிது இடைவெளிக்குப் பின்பு கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் “ஆடை“ திரைப்படம் வெளியாகியது. முற்றிலும் வித்தியாசமான இந்த படத்தின் மூலம் பாசிடிவ் மற்றும் நெகடிவ் கமெண்டுகளை சம்பாதித்தார். தற்போது வெப் சீரியஸ்களில் கவனம் செலுத்திவரும் இவர் “கடாவர்” திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார்.

தனது பிறந்தநாளை (அக்டோபர் 26) முன்னிட்டு இந்தத் தகவலை வெளியிட்ட நடிகை அமலாபால், தன்னுடைய வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளில் பல பாடங்களைக் கற்றுக் கொண்டதாகவும் நடிகையாக இருப்பதைவிட தயாரிப்பாளராக பல விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது பிறந்தநாளையொட்டி நடிகை அமலாபால் சிவப்பு உடையணிந்து போட்டோஷுட் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அதோடு 4 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றதற்கு நடிகை அமலாபால் நன்றி தெரிவித்துள்ளார். மலையாளத்தில் “ஆடுஜீவிதம்“ திரைப்படத்தில் நடித்துவரும் இவர் தான் தயாரிக்கும் “கடாவர்“ திரைப்படத்தில் தடயவில் அறுவைசிகிச்சை நிபுணராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.