இணையத்தில் வைரலாகும் அமலாபாலின் பீச் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,October 05 2020]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால் இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

குறிப்பாக அவர் சமீபத்தில் பதிவு செய்த பிகினி உடை புகைப்படங்கள் பெரும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது அவர் பீச்சில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சியான உடையில் அழகிய பீச்சில் மரத்தில் உட்கார்ந்து இருப்பது போன்றும், பீச் அருகே நின்று கொண்டிருப்பது போன்றும் உள்ள இந்த புகைப்பட பதிவில், ‘Bloom now - bloom free”. - Surrender & Rise, again’ என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

அமலாபால் தற்போது ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் ரிலீஸாகும், மேலும் அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.