கர்ப்பமாக இருந்த போதிலும் செல்ப் டிரைவ் செய்து பட புரமோஷனுக்கு செல்லும் அமலாபால்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,March 12 2024]

தான் நடித்த திரைப்படங்களின் புரமோஷனுக்கு செல்வதில்லை என்ற கொள்கையை ஒரு சில நடிகர் நடிகைகள் வைத்திருக்கும் நிலையில் நடிகை அமலா பால் தற்போது கர்ப்பிணியாக இருந்த போதிலும் தான் நடித்த திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு தானே கார் ஓட்டி சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகிய ’ஆடு ஜீவிதம்’ என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக அமலாபால் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்று எப்எம் ரேடியோ நிலையத்தில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக நடிகை அமலாபால் தானே கார் ஓட்டி அந்த ரேடியோ நிலையத்திற்கு செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அமலா பாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சாதாரண நிலையில் இருக்கும் போது புரமோஷனுக்கு செல்லாத நடிகைகள் இருக்கும் நிலையில் கர்ப்பிணியாக இருந்த போதிலும் அதையும் பொருட்படுத்தாமல் புரமோஷனுக்கு சென்ற அமலாபால் செயல் பாராட்டத்தக்கது என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.