எல்லா கேள்விகளும் பெண்களுக்கு மட்டும்தானா? அமலாபால் ஆவேச கேள்வி
- IndiaGlitz, [Tuesday,April 28 2020]
தமிழ் திரையுலகின் முன்னனி நடிகைகளில் ஒருவரான அமலாபால் தனது சமூக வலைத்தளத்தில் கேள்விகள் எல்லாம் பெண்களை நோக்கியே வருவதாகவும் ஆண்களிடம் எந்த கேள்வியும் கேட்கப்படுவதில்லை என்றும் ஆவேசமாக பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்த உலகில் அனைத்து கேள்விகளும் பெண்களுக்கே கேட்கப்படுகின்றன. காதல் பற்றி, திருமணம் பற்றி, குழந்தைகளைப் பற்றி இன்னும் பல கேள்விகள். கடவுளைப் பற்றியோ, தத்துவத்தை பற்றியோ வாழ்க்கையைப் பற்றியோ கேட்கப்படுவதில்லை. இந்த கேள்விகள் எல்லாம் ஆணை நோக்கி கேட்கப்படுவதில்லை ஏன்? பெண் அடிமைத்தனத்திலும், அவமானத்திலும், பொருளாதாரத்தில் சார்ந்து இருப்பதாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவள் குழந்தையை பெற்று கொடுப்பவளாக இருப்பதாலும் தான்.
பல நூற்றாண்டுகளாக அவள் வலியுடன் வாழ்ந்து வருகிறாள். அவளுக்குள் வளர்ந்து வரும் குழந்தை அவளை சாப்பிட அனுமதிக்காது. அவள் எப்போதும் வாந்தி எடுப்பது போல் உணர்கிறாள். குழந்தை ஒன்பது மாதங்கள் வளர்ந்ததும், குழந்தையை பெற்றெடுப்பது என்பது கிட்டத்தட்ட பெண்ணின் மரணம் போன்றது. அவள் ஒரு கர்ப்பத்திலிருந்து மீண்டதும், உடனே அவளது கணவன் அவளை மீண்டும் கர்ப்பமாக்கத் தயாராக இருக்கிறான். மக்கள் தொகையை பெருக்கும் தொழிற்சாலையாக இருப்பது பெண்ணின் ஒரே செயல்பாடு என்று தெரிகிறது.
ஆனால் ஆணின் செயல்பாடு என்ன? அவள் வலியில் அவன் பங்கேற்கவில்லை. அவள் கஷ்டப்படுகிற ஒன்பது மாதங்கள், அவள் அனுபவிக்கும் குழந்தையின் பிறப்பின்போது அந்த ஆண் என்ன செய்கிறான்? ஆணைப் பொருத்தவரை, அவர் தனது காமத்தையும் பாலுணர்வையும் பூர்த்தி செய்ய பெண்ணை ஒரு பொருளாகப் பயன்படுத்துகிறார். அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது குறித்து அவர் சிறிதும் கவலைப்படவில்லை.
இன்னும் அவர் 'ஐ லவ் யூ' என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவர் அவளை உண்மையிலேயே நேசித்திருந்தால், உலகம் அதிக மக்கள் தொகையில் இருந்திருக்காது. அவரது 'காதல்' என்ற வார்த்தை போலியாக உள்ளது. அவர் அவளை கிட்டத்தட்ட ஒரு வளர்ப்பு பிராணி போலவே நடத்தி வருகிறார். இவ்வாறு அமலாபால் தெரிவித்துள்ளார்.
View this post on InstagramA post shared by Amala Paul ✨ (@amalapaul) on Apr 27, 2020 at 11:07pm PDT