அரவிந்தசாமி படத்தில் இணையும் 'தெறி' பேபி

  • IndiaGlitz, [Monday,February 27 2017]

'தனி ஒருவன்' மற்றும் 'போகன்' வெற்றிக்கு பின்னர் தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களில் ஒருவராக மாறிவிட்ட அரவிந்தசாமி, சமீபத்தில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்த படத்தில் மம்முட்டி கேரக்டரில் அரவிந்தசாமியும், நயன்தாரா கேரக்டரில் அமலாபாலும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் அமலாபாலின் மகளாக நடிக்க தற்போது 'தெறி' பேபியும், நடிகை மீனாவும் மகளுமான நைனிகா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மலையாளத்தில் இந்த படத்தை இயக்கிய சித்திக் தமிழிலும் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் விஜய் நடித்த ஃபிரெண்ட்ஸ், காவலன் உள்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழுக்கு ஏற்றவாறு இந்த படத்தின் திரைக்கதையை சற்று மாற்றி வருவதாகவும், 'சதுரங்க வேட்டை 2' படத்தை அரவிந்தசாமி முடித்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.