அயர்லாந்து அம்மாவுடன் பிறந்த நாள் கொண்டாடிய அமலா.. வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை அமலா இன்று தனது 56வது பிறந்தநாளை தனது அயர்லாந்து நாட்டின் அம்மாவுடன் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை அமலாவின் அம்மா அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் கொல்கத்தாவில் தான் பிறந்து வளர்ந்தார். டி ராஜேந்தர் நடித்து இயக்கிய ‘மைதிலி என்னை காதலி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அமலா அதன்பின் கமல்ஹாசனின் ‘சத்யா’, ‘பேசும் படம்’, ‘வெற்றி விழா’, ரஜினியின் ‘வேலைக்காரன்’, ‘மாப்பிள்ளை’ படங்களில் நடித்தார். மேலும் சத்யராஜ், மோகன், பிரபு உட்பட பல பிரபலங்கள் உடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 1992 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை அமலா திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு அகில் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் அமலா தனது பிறந்த நாளை 56வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் தனது அயர்லாந்து நாட்டின் அம்மா, கணவர் நாகார்ஜுனா, மகன் அகில் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவருக்கு
வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com