20 வருடங்களுக்கு பின் அமலா ரீஎண்ட்ரி ஆகும் தமிழ்ப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் கடந்த 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா என்பது தெரிந்ததே. டி ராஜேந்தர் இயக்கிய ’மைதிலி என்னை காதலி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ரஜினிகாந்த் நடித்த ’வேலைக்காரன்’, ‘மாப்பிள்ளை’, கமல்ஹாசன் நடித்த ’பேசும்படம்’, ‘சத்யா’, மணிரத்னம் இயக்கிய ’அக்னி நட்சத்திரம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை அமலா கடந்த 1991ஆம் ஆண்டு பாசில் இயக்கிய ’கற்பூர முல்லை’ என்ற திரைப்படத்திற்கு பின்னர் தமிழ் திரைப் படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தில் நாயகனாக ஷர்வானந்த் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு தமிழில் ’கணம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ கார்த்திக் என்பவர் இயக்க உள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையில் சுஜித் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
#Kanam #கணம்
— DreamWarriorPictures (@DreamWarriorpic) September 24, 2021
Tamil title of our next bilingual.@ImSharwanand @riturv @amalaakkineni1 @actorsathish @thilak_ramesh @JxBe @sujithsarang @sreejithsarang @twittshrees pic.twitter.com/nqyKFKCCt7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com