கமல் கிட்ட மறக்க முடியாத விஷயம் - அமலா
Send us your feedback to audioarticles@vaarta.com
IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர் . முக்கிய பிரபலமாக திரைப்பட நடிகை அமலா கலந்து கொண்டார். அப்போது திரைப்பட நடிகை அமலா அவர்களிடம் நீங்கள் 1980 களில் கதாநாயகியாக இருந்துள்ளீர்கள் அப்போது இருந்த சினிமாவிற்கு இப்போது உள்ள சினிமாவிற்கு உள்ள வித்தியாசத்தை கூறமுடியுமா ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .
அதற்கு நடிகை அமலா அவர்கள் " சினிமா என்பது ஒரு கலை .மக்கள் மாற மாற சினிமாவும் அதற்கேற்ப மாற்றம் பெறும் . அப்போது தான் சினிமா என்ற கலை ஆரோக்யமானதாக இருக்கும் " என்று கூறினார்.அதற்கடுத்து நீங்கள் நடிகர் கமல் அவர்களுடன் நடித்து உள்ளீர்கள் அந்த அனுபவத்தை பற்றி கூறமுடியுமா ? என்று கேட்கப்பட்டது .அதற்கு அவர் " நான் நிறைய விசியங்களை கமல் சாரிடம் இருந்து கற்றுள்ளேன் ,ஒரு நடிகையாக எப்படி தயாராக வேண்டும் என்று அவரிடம் தான் கற்று கொண்டேன் " என்று பதில் கூறினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments