கேரளாவில் பிரபல தமிழ் நடிகை சென்ற கார் விபத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
தலைநகரம், சபரி, பெரியார், நான் அவனில்லை, அறை எண் 305-ல் கடவுள், உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஜோதிர்மயி. இவர் தனது கணவருடன் கேரளாவில் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியதாகவும், அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
கேரளாவில் உள்ள கொங்கிபள்ளி என்ற தேசிய நெடுஞ்சாலையில் நடிகை ஜோதிர்மயி தனது கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த பஸ் இவர்கள் சென்ற கார் மீது மோதியதால் விபத்துக்குள்ளாகியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் நடிகை ஜோதிர்மயி மற்றும் அவரது கணவர் அமல்நீரத் ஆகிய இருவரும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.
விபத்து குறித்த தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஜோதிர்மயி தம்பதிகளை வேறு காரில் கொச்சிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து கேரள போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகை ஜோதிர்மயி கடந்த ஏப்ரல் மாதம் இயக்குனர் அமல்நீரத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் நேற்று மால்கே என்ற பகுதியில் நடந்த குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீடு திரும்பும்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com