'இந்தியன் 2' ரிலீஸ் தேதி அறிவித்தவுடன் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் செய்த தரமான சம்பவம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த சில நாட்களில் ’இந்தியன்’ படத்தின் தயாரிப்பாளர் ஏஎம் ரத்தினம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகிறது என்றால் அதற்கு சில நாட்களுக்கு முன் முதல் பாகத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக ’கேஜிஎப்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியான சில நாட்களுக்கு முன்பு தான் ’கேஜிஎப்’ முதல் பாகம் வெளியானது என்றும் முதல் பாகத்தை பார்த்து விட்டு அதற்கு அடுத்த சில நாட்களில் இரண்டாம் பாகத்தை பார்த்தால் கதை கோர்வையாக இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளதை அடுத்து ஜூன் 7ஆம் தேதி ’இந்தியன்’ திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி ’இந்தியன்’ படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ’இந்தியன்’ படத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு ’இந்தியன் 2’ படத்தை பார்த்தால் முழுமையாக ரசிக்க முடியும் என்பது ஏஎம் ரத்னம் அவர்களின் திட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்த ’இந்தியன்’ படம் கடந்த 1996 ஆம் ஆண்டு இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Get ready to re-live the blockbuster experience once again! 🤩#Bharateeyudu - 1 Re-Release Trailer Out TOMORROW, Stay Tuned!!💥
— AM Rathnam (@AMRathnamOfl) May 26, 2024
Releasing worldwide in Telugu & Tamil on June 7th at theatres near you! 🔥@ikamalhaasan @shankarshanmugh @arrahman @mkoirala @UrmilaMatondkar… pic.twitter.com/wC36I7saE6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com