ரூ.50 ஆயிரம் மின்கட்டணம்: அதிர்ச்சி அடைந்த பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த கொரோனா லாக்டவுன் நேரத்தில் கொரோனாவால் ஏற்படும் அதிர்ச்சியை விட மின் கட்டணத்தால் ஏற்படும் அதிர்ச்சி தான் பலரை அதிர வைத்துள்ளது. ஏற்கனவே அதிக அளவு மின்கட்டணம் வருவதாக பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் பலர் புகார் அளித்தனர் என்பது தெரிந்ததே. பிரசன்னா உள்பட ஒருசில தமிழ் நட்சத்திரங்களும், இந்தி நடிகை டாப்சி உள்பட பல நடிகர் நடிகைகள் இது குறித்து தங்கள் டுவிட்டர் பக்கங்களில் அதிக அளவு மின்சார கட்டணம் வந்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது நடிகை திவ்யா தத்தா தனது வீட்டில் இந்த மாதத்திற்குரிய மின் கட்டணம் ரூபாய் 50,000 வந்திருப்பதாகவும், தனக்கு கொரோனா ஊரடங்கு நேரத்தில் மின்சார நிறுவனம் அளித்த பரிசா இது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்றும் அவர் சம்பந்தப்பட்ட மின்சார நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்பட்டதாகவும் விரைவில் அவரது மின்கட்டணம் சரிபார்க்கப்படும் என்றும் பதில் வந்திருப்பதாகவும் திவ்யா தத்தா கூறியுள்ளார்.
நடிகை திவ்யா தத்தாவின் இந்த பதிவு குறித்து அவரது ரசிகர்கள் கருத்து கூறும்போது, ‘நீங்கள் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் ஏதேனும் வைத்துள்ளீர்களா? என்றும், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சேர்த்து மின் கட்டணம் கட்டப்போகின்றீர்களா? என்றும் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். லாக்டவுனை காரணம் அதிகளவு மின்கட்டணம் வருவது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இதே பிரச்சனை உள்ளது என்பது பாலிவுட் நடிகர் நடிகைகளை டுவிட்டுகளில் இருந்து தெரிய வருகிறது.
Dear @TataPower what’s happening.. a monthly bill of 51000?? Shagun dena hai lockdown ka? Pls sort this asap.
— Divya Dutta (@divyadutta25) July 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com