அல்சைமர்ஸ் நோயை ஆரம்பத்திலேயே அறிந்து கொள்வது எப்படி ?

  • IndiaGlitz, [Wednesday,April 17 2024]

 

அல்சைமர்ஸ் நோய் என்பது மூளை நரம்பியல் பிரச்சினை ஆகும்.இதில் மூளையில் உள்ள செல்கள் இறப்பதால் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சி ஏற்படுகிறது.இந்த நோயால் சுமார் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.2060 ஆம் ஆண்டு இந்த நோய் இதை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதே போல் இந்த நோய் வயதானவர்களையே அதிகமாக தாக்குகின்றன.குறிப்பாக 60 வயதிற்கு மேல் உள்ளவர்களையே இது பாதிக்கிறது.இளையவர்களை 10% பாதிக்கிறது.இந்த நோய் வந்தால் நரம்பு செல்கள் மற்றும் நியூரான்களுக்கு இடையேயான தொடர்பை இழக்கும் அபாயமும் உள்ளது.

மூளையின் பல பகுதிகளுக்கு இடையேயான உறுப்புகள் தகவல் பரிமாற்றம் செய்யாது.ஒரு நிகழ்வை நியாபகம் வைத்து கொள்வதோ,ஒருவரை அடையாளம் காண்பதோ முடியாமல் போய் விடும்.இறுதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒருவர் பார்த்து கொள்ளும் நிலை ஏற்படும்.

இந்த நோயின் அறிகுறிகள்:

1. புரியாத நிலை,மீண்டும் மீண்டும் கேள்விகள் கேட்பர் மற்றும் உரையாடல் மேற்கொள்வார்.
2.தன்னுடைய நோயால் பல பொருட்களை இழத்தல்.
3.நடக்கும் நிகழ்வுகள் அல்லது பேசும் வார்த்தைகள் நினைவில் வைத்து கொள்ளாமல் போவது.
4.ஏதும் புரியாமல் அலைந்து திரிவது.
5.பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றிய குறைவான புரிதல்.
6.ஒரு வேலையை முடிப்பதில் சிரமம்.
7.ஞாபகம் வைத்து கொள்ள சிரமப்படுவது.
8.முடிவுகள் எடுப்பதில் சிரமம்.
9.தன்னிலை புரியாத நிலை.
10.ஆளுமை மற்றும் நடத்தை மாற்றம்.

இந்த நோயின் நிலை:

இந்த நோய் லேசானதாக அல்லது கடுமையாக கூட இருக்கலாம்.லேசான மிதமான இறுதியில் கடுமையான முறையில் பாதிக்கப்படுவர்.வழக்கமாக செய்யும் பணியை செய்ய அதிக நேரம் எடுத்து கொள்ளுதல்,பணம் கையாள சிரமப்படுவது,மன நிம்மதி அற்று இருப்பது,குழப்பம்,புதிய விஷயங்களை கற்று கொள்ள சிரமம் ,பிரம்மை பிடித்தது போல் இருப்பது,ஒருவரை தொடர்பு கொள்ள சிரமம்.தன் படுக்கையை விட்டு எழும்ப கஷ்டப்படுவது போன்ற நிலை இருக்கும்.இதுவே அல்சைமர் நோயின் நிலை ஆகும் .

இந்த நோயின் பரிசோதனை:

இரத்தம் மற்றும் சிறுநீரக பரிசோதனை,மூளை இமேஜிங் பரிசோதனை,மனநிலை சோதனை,நரம்பியல் மற்றும் உளவியல் சோதனை போன்ற வகையான பரிசோதனைகள் உள்ளன.

இந்த நோய்க்கான சிகிச்சை முறை;

இந்த வகையான நோய்க்கென்று தனி சிகிச்சைகள் இல்லை.ஆனால் நம் நிலையை சரி செய்து கொள்ள அறிகுறிகளிலிருந்து தன்னை ஓரளவிற்கு பாதுகாத்து கொள்ள ஒரு சில மருந்துகள் உள்ளன.அவை நமது நினைவாற்றலை மேம்படுத்தி கொள்ள,சீரான வாழ்க்கை நிலையை மேற்கொள்ள உதவுகின்றன.சரியான வழிகாட்டுதல் மற்றும் பராமரிப்புடன் மேற்கொண்டால் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

இந்த நோயை பற்றிய தகவல்களை மற்றவர்களுக்கு தெரிய படுத்த மேலும் விழிப்புணர்வை உருவாக்க வருடா வருடம் நடக்கும் முகாம்களில் கலந்து கொண்டு நோய் வரும் முன்னே தன்னை பாதுகாத்து கொள்ள முயற்சியுங்கள்.இது போன்ற தகவல்கள் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.