நான் இவ்வளவு தான் படிச்சிருக்கேன்.....! ரசிகர்களுக்கு பதில் கூறிய ஆல்யா மானஸா....!

  • IndiaGlitz, [Friday,August 20 2021]

முதன்முதலாக கலைஞர் டிவியில் வெளியான மானாட மயிலாட என்ற டான்ஸ் நிகழ்ச்சி மூலம், தொலைக்காட்சியில் அறிமுகமானவர் தான் நடிகை ஆல்யா மானஸா. ராஜா ராணி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதே சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்லா என்ற பெண்குழந்தையும் உள்ளது. இதையடுத்து ஏராளமான விளம்பரங்களிலும், விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார் மானஸா. சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா, அவ்வப்போது ரசிகர்களிடம் உரையாடி வருவார்.



இந்நிலையில் அண்மையில் ரசிகர்களிடம் என்னிடம் ஏதாவது கேள்வி கேளுங்கள் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் நீங்கள் எவ்வளவு படித்துள்ளீர்கள் என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆல்யா 12-ஆம் வகுப்பு தான் முடித்துள்ளேன். சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தேன், ஆனால் பின்பு படிப்பை தொடரவில்லை என்று பதிவிட்டுள்ளார். மான்ஸாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.