கோபிகா என கூப்பிட்டால் அந்த பொண்ணு அவ்வளவுதான்....! காமக்கொடூரன் பாபா-வின் லீலைகள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர், சிவசங்கர் பாபா செய்த லீலைகள் குறித்து பேசியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில் பாபா தன்னையே கிருஷ்ணனாக பாவித்துக் கொள்கிறார். அங்கு பள்ளியில் பயிலும் மாணவிகளை கோபிகாக்கள் என்றும் அழைக்கிறார். பாபா வாயை திறந்து மாணவிகளை கோபிகா என அழைத்துவிட்டால் போதும், அவர்களை பாலியல் வன்புணர்வு செய்யாமல் விடமாட்டார். அதிலும் குறிப்பாக சிங்கிள் மதர் உள்ள பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகள் மற்றும் பயந்த சுபாவம் உள்ளவர்களைத்தான் குறிவைப்பார்.
அவர்களிடம் நான் தான் உன் அப்பா, நான் தான் உன் பாய்பிரண்ட், நான் தான் உன் கணவன் என்று கூறி, இளம் மாணவிகளை மூளைச்சலவை செய்து விடுவான். பாபுவுடன் டேட்டிங் செல்ல வேண்டுமென்றால், அதற்காகவும் தனியாக கிளாஸ் எடுக்கிறார்கள். தன்னுடைய லாஞ்சிற்கு அழைத்து சென்று குழந்தைகளுக்கு சாக்லேட்டுகள் மற்றும் மதுபானங்களை குடிக்க தருவார். அந்த இடம் மிகவும் கலர்புல்லாக இருக்கும், மாணவிகளுக்கு பிறந்தநாள் என்றால் விலையுயர்ந்த கிப்ட்களையும், ஆடைகளையும் பரிசாக கொடுப்பார்.
சும்மா ஒரு சிப் குடித்து பார் என பள்ளி மாணவிகளிடம் மதுவை குடிக்க சொல்லி வற்புறுத்துவார். இதையெல்லாம் நான் பார்த்ததில்லை, ஆனால் சில பெண்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். இது பற்றி நான் பள்ளியை எதிர்த்து கேள்வி கேட்டபோது, பெற்றோரோரிடம் குறைந்த மதிப்பெண் தான் வாங்கியுள்ளேன், நான் படிக்காத மாணவி என எனக்கு டிசி கொடுத்துவிட்டார்கள். இதை நிரூபிக்கும் வகையில் நான் மற்றொரு பள்ளியில் சேர்ந்து டாப்பர் மாணவியாக என்னை வெளிக்கொண்டு வந்தேன்.
பாபாவை தவிர அங்குள்ள யாரும் மாணவிகளை தவறாக நடத்தவும் மாட்டார்கள், பாலியல் வன்புணர்வும் செய்ய மாட்டார்கள். ஆனால் அங்குள்ள ஆசிரியைகளே பாபுவிடம், பெண்களை அழைத்துச்செல்வார்கள். ஒரு பெண் தனக்கு பிரச்சனைகள் இருப்பதாக பாபா-விடம் கூறியுள்ளார். அப்போது உனக்காக நான் இருக்கிறேன் என்று, அப்பெண்ணின் அந்தரங்க இடங்களில் தொட்டும், முத்தமிட்டும் உள்ளார். ஆனால் மாணவி அந்த இடத்தை விட்டு எழுந்து அழுதுகொண்டே வந்ததாக என்னிடம் புலம்பினார். இதையறியாமல் பல பெற்றோர்களும், அவர்களின் குழந்தைகளை இங்கு சேர்க்கிறார்கள், இச்சை எண்ணம் கொண்ட பாபாவை கடவுள் என நம்புகிறார்கள். பலரும் தெரிந்தே மாணவிகளை அங்கு தங்க வைப்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது" என அந்த மாணவி கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com