பிரதமரிடம் ரஜினி, கமல் பேச வேண்டும். பிரபல இயக்குனர் கோரிக்கை
- IndiaGlitz, [Monday,October 09 2017]
கோலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமே ஆன்லைன் பைரஸி, திருட்டு டிவிடி ஆகிய பிரச்சனைகளால் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு திரைத்துறைக்கு ஜிஎஸ்டி என்ற புதிய சுமையையும் ஏற்றியுள்ளது. அதுவும் சூதாட்டத்திற்கு இணையாக திரைத்துறைக்கு வரி விதித்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து 'பிரேமம்' இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கோலிவுட்டின் பெரிய ஸ்டார்களான ரஜினி மற்றும் கமல் ஆகியோர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். சமீபத்தில் ஒருசில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. ஆனால் அதில் திரைத்துறை இடம்பெறவில்லை என்றும், திரைத்துறைக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு பெற அல்லது குறைந்த வரிவிதிக்க ரஜினியும், கமலும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கமல், ரஜினி பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தினால் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களையும் காப்பாற்றப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார். அல்போன்ஸ் புத்திரன் கோரிக்கையை கமல், ரஜினி ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்