யாருக்கும் இதுவரை வராத ஐடியா.. அல்போன்ஸ் புத்திரன் பதிவு.. ட்ரோல் செய்யாமல் வாழ்த்தும் நெட்டிசன்கள்..!

  • IndiaGlitz, [Monday,January 29 2024]

கடந்த சில வாரங்களாகவே இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பதிவுக்கு நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் செய்த பதிவுக்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

’நேரம்’ ‘பிரேமம்’ போன்ற அற்புதமான படங்களை இயக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் என்பதும் ஆனால் அதன் பிறகு இவர் இயக்கிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தனக்கு ஆட்டிசம் பாதித்திருப்பதாக கூறிய அல்போன்ஸ் புத்திரன் அதன் பிறகு செய்த சில பதிவுகள் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அல்போன்ஸ் புத்திரன் பதிவு செய்த நிலையில் வழக்கம் போல் நெட்டிசன்கள் ட்ரோல் செய்யாமல் இந்த பதிவை வரவேற்றுள்ளனர். ’உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனம் வேகமாகவும் சரியான நேரத்திற்கும் டெலிவரி செய்து வருகிறது. அதேபோல் சாதாரண மக்களுக்கும் ஊனமுற்றவருக்கும் வீட்டிற்கே சென்று சிறந்த மருத்துவம் பார்க்கும் வகையில் ஒரு வசதியை ஆரம்பியுங்கள்.

ஹோட்டல்கள் மற்றும் இன்ஸ்டாமார்ட் கடைகளை போல அனைத்து துறைகளின் சேவை எளிதில் மக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். குறிப்பாக மருத்துவம் வீட்டுக்கே வந்து சேர வேண்டும். சரியாக இதை நீங்கள் ஒரு மாதத்திற்குள் பின்பற்றினால் உலகிலேயே மிகச்சிறந்த நிறுவனம் ஆகி விடுவீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்

இதுவரை யாருக்கும் தோன்றாத இந்த ஐடியாவை அல்போன்ஸ் தெரிவித்துள்ளதை அடுத்து நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

More News

'லால் சலாம்' விழாவில் ஐஸ்வர்யா சொன்ன சங்கி வார்த்தை: ரஜினிகாந்த் விளக்கம்..!

சமீபத்தில் 'லால் சலாம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த போது அதில் பேசிய இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'தனது அப்பாவை சங்கி என்று கூறுவது தனக்கு வருத்தமாக இருக்கிறது

69வது பிலிம்பேர் விருதுகள்: தலா 5 விருதுகளை அள்ளிய மூன்று திரைப்படங்கள்..!

 69 ஆவது பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் மூன்று பாலிவுட் திரைப்படங்கள் தலா 5 விருதுகளை அள்ளி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? கணவருடன் வித்தியாசமான கேம் விளையாடிய அமலாபால்..

நடிகை அமலாபால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? அல்லது இரட்டை குழந்தைகளா? என்ற விளையாட்டை தனது

ஒரு அதிசய பெண்ணை பார்த்தேன்.. வார்த்தைகளால் விளக்க முடியவில்லை: KPY பாலா

 விஜய் டிவி பிரபலமாக KPY பாலா ஒரு அதிசய பெண்ணை பார்த்ததாகவும் அந்த பெண்ணை பார்த்ததும் அவர் செய்த காரியத்தால் தனக்கு வார்த்தைகளே வெளிவரவில்லை என்றும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுவரை நடிக்காத கதைக்களம்.. முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில்.. 'தலைவர் 171' படத்தின் மாஸ் தகவல்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'லால் சலாம்' திரைப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டையன்'