ஒரு டிரில்லியன் நிறுவனங்களில் பட்டியலில் கூகுள்
- IndiaGlitz, [Sunday,January 19 2020]
ஆப்பிள், அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே இதுவரை உலகில் ஒரு ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சந்தை மதிப்பில் நிறுவனம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலரை எட்டி இருப்பதாக அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுளின் துணை நிறுவனங்கள் அனைத்தும் தாய் நிறுவனமான ஆல்பபெட்டில் இணைந்து ஒரே நிறுவனமாக கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ஆல்பபெட் நிறுவனத்திற்கு தமிழரான சுந்தர் பிச்சை சிஇஓ ஆக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பதவி ஏற்ற ஒரு சில மாதங்களிலேயே ஆல்ஃபபெட் நிறுவனம் ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்பை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனமும், அதனை தொடர்ந்து மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஒரு ட்ரில்லியன் சந்தை மதிப்பைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடதக்கது. கூகுளை அடுத்து விரைவில் ஃபேஸ்புக் நிறுவனமும் இந்தப் பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.