'ராஜாவுக்கு செக்' வைத்த இயக்குனர் சேரன்

  • IndiaGlitz, [Friday,January 25 2019]

நீண்ட இடைவெளிக்கு பின் சேரன் இயக்கி வரும் 'திருமணம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. சித்தார்த் விபின் இசையில் வெளியான இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 'திருமணம்' படத்தை ஒருபக்கம் இயக்கி வரும் சேரன், இன்னொரு பக்கம் ஒரு படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'ராஜாவுக்கு செக்' என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேரன் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் நந்தனா வர்மா, ஸ்ருஷ்டி டாங்கே ஆகிய இரண்டு நாயகிகள் நடித்து வருகின்றனர். த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தை ராஜ்குமார் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஜெயம் ரவி, ஸ்ரேயா நடித்த 'மழை' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷால்-தமன்னா படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

விஷால், தமன்னா நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு 'கத்திச்சண்டை' என்ற திரைப்படம் வெளிவந்த நிலையில் மிண்டும் ஒரு படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது

தனுஷின் 'அசுரன்' படம் குறித்த முக்கிய தகவல்

தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு 'வடசென்னை' மற்றும் 'மாரி 2' என இரண்டு படங்கள் வெளியான நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்தது.

'தளபதி 63' படம் குறித்த ஒரு சர்ப்ரைஸ் தகவல்

தளபதி விஜய், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அஜித் ரசிகர்களின் செயல் பைத்தியக்காரத்தனம்: சீமான்

அஜித் நடித்த விஸ்வாசம் படம் வெளியான தினத்தில் அவரது ரசிகர்கள் அஜித் கட் அவுட்டுக்கு பால் ஊற்றியதை சீமான் கண்டித்துள்ளார். மேலும் அஜித் ரசிகர்களின் இந்த செயல் பைத்தியக்காரத்தனம் என்று கூறியுள்ளார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அழைப்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கி வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.