நள்ளிரவில் வீடு திரும்ப 'Zomato'வை பயன்படுத்திய இளைஞர்
Send us your feedback to audioarticles@vaarta.com
நள்ளிரவு நேரத்தில் வேலை முடித்து வீடு திரும்ப முடிவு செய்த ஒரு இளைஞர் கேப்-இல் சென்றால் அதிக பணம் செலவாகும் என்பதால் சமயோசிதமாக 'Zomato'வை பயன்படுத்தியுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
ஐதராபாத்தை பகுதியை சேர்ந்த உபேஷ் என்ற என்ற இளைஞர் தனது பணி முடிந்ததும் வீடு திரும்ப முடிவு செய்து ஒரு தனியார் கேப் நிறுவனத்தை அணுகி உள்ளார். ஆனால் அதில் ரூபாய் ரூ.300 ஆகும் என காட்டியது. இந்த நிலையில் அவருக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியுள்ளது. மிகுந்த பசியில் இருந்த அந்த இளைஞர் தான் இருக்கும் இடத்தின் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் ஒரு முட்டை தோசை ஆர்டர் செய்தார். அதை தனது வீட்டில் டெலிவரி செய்யும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
அந்த தோசையை வாங்க வந்த zomato ஊழியரிடம் 'நான் தான் அந்த உணவை ஆர்டர் செய்தேன் என்றும், தன்னை வீட்டிற்கு அவரது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். உடனே அந்த ஊழியரும் ஒப்புக்கொண்டதை அடுத்து ஒரு பைசா செலவில்லாமல் zomato ஊழியருடன் வீட்டுக்கு வந்துள்ளார். இதற்கு உதவியாக அந்த ஊழியரின் சேவைக்கு ஃபைவ் ஸ்டார் ரேட்டிங் அளித்துள்ளார். இந்த சம்பவத்தை அந்த நபர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ய இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout