ரூ.500 கோடி பட்ஜெட்டில் 3Dயில் 'இராமாயணம்'. பாகுபலி கொடுத்த தைரியமா?
- IndiaGlitz, [Wednesday,May 10 2017]
நல்ல கதை, சிறந்த திரைக்கதை, கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நட்சத்திரங்கள், கடுமையான அர்ப்பணிப்புள்ள உழைப்பு ஆகியவை இருந்தால் எத்தனை கோடி செலவு செய்து திரைப்படம் எடுத்தாலும் அதைவிட பலமடங்கு லாபம் பார்க்கலாம் என்பதை நிரூபித்தது எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' பட டீம்
இந்த படத்தின் மாபெரும் வெற்றி கொடுத்த தைரியம் காரணமாக பல தயாரிப்பாளர்கள் பெரிய பட்ஜெட் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளனர். அந்த வகையில் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள திரைப்படம் இதிகாசங்களில் ஒன்றான 'இராமாயணம்'
அல்லு அரவிந்த், மது மேண்டேனா, நமித் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் மூன்று பாகங்களாக தயாரிக்கப்படவுள்ளதாம். நாம் ஏற்கனவே பலமுறை பார்த்த, கேட்ட கதை, பலமுறை தொலைக்காட்சி தொடராக பார்த்த கதையாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பத்தில் 3Dயில் தயாராகவுள்ள இந்த படம் ராமாயணத்தை வேற லெவலில் நம்கண்முன் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நம் முன் நிற்கும் ஒரே கேள்வி ராமர், சீதை, ராவணன் கேரக்டர்களில் நடிக்கப்போவது யார் என்பதுதான். இந்த தகவல்களுடன் இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் வரை பொறுமை காப்போம்.