சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: சோசியல் மீடியா பதிவுகளுக்கு அல்லு அர்ஜுன் எச்சரிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
போலியான பெயர்களில் சமூக வலைதளங்களில் கணக்குகள் தொடங்கி அவதூறான கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என நடிகர் அல்லு அர்ஜுன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தை பார்க்க வந்த ரேவதி என்ற பெண். கூட்ட நெரிசல் காரணமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அல்லு அர்ஜுன் தனது சமூக வலைத்தளத்தில், "என்னுடைய அனைத்து ரசிகர்களுக்கும் நான் விடுத்துள்ள வேண்டுகோள் என்னவெனில், எப்போதும் போல உங்கள் உணர்வுகளை பொறுப்புடன் பதிவு செய்யுங்கள். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் எந்த விதமான தவறான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டாம். மேலும், என்னுடைய ரசிகர்கள் என்ற பெயரில் போலியான சமூக வலைதள கணக்குகள் ஆரம்பித்து அவதூறான கருத்துக்கள் தெரிவித்து வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், அதுபோன்ற போலி சமூக வலைதள பதிவுகளுக்கு என்னுடைய ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டாம்" என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
I appeal to all my fans to express their feelings responsibly, as always and not resort to any kind of abusive language or behavior both online and offline. #TeamAA pic.twitter.com/qIocw4uCfk
— Allu Arjun (@alluarjun) December 22, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments