சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: சோசியல் மீடியா பதிவுகளுக்கு அல்லு அர்ஜுன் எச்சரிக்கை..!

  • IndiaGlitz, [Sunday,December 22 2024]

போலியான பெயர்களில் சமூக வலைதளங்களில் கணக்குகள் தொடங்கி அவதூறான கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என நடிகர் அல்லு அர்ஜுன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தை பார்க்க வந்த ரேவதி என்ற பெண். கூட்ட நெரிசல் காரணமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அல்லு அர்ஜுன் தனது சமூக வலைத்தளத்தில், என்னுடைய அனைத்து ரசிகர்களுக்கும் நான் விடுத்துள்ள வேண்டுகோள் என்னவெனில், எப்போதும் போல உங்கள் உணர்வுகளை பொறுப்புடன் பதிவு செய்யுங்கள். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் எந்த விதமான தவறான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டாம். மேலும், என்னுடைய ரசிகர்கள் என்ற பெயரில் போலியான சமூக வலைதள கணக்குகள் ஆரம்பித்து அவதூறான கருத்துக்கள் தெரிவித்து வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், அதுபோன்ற போலி சமூக வலைதள பதிவுகளுக்கு என்னுடைய ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த படத்திற்கு வரிவிலக்கு: முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கோரிக்கை..!

தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்த திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் நிறுவனம்.. அவரே கூறிய தகவல்..!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் தகவல் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெங்கட் பிரபு

'கலாச்சாரம் சீரழிந்து விட்டது.. ராதிகா ஆப்தேவின் கர்ப்பகால போட்டோக்களுக்கு கண்டனம்..!

கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு குழந்தை பிறந்த நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

பிரபல சீரியல் நடிகையை விவாகரத்து செய்த நடிகர்.. செட்டில்மென்ட் முடிந்ததாக அறிவிப்பு..!

பிரபல சீரியல் நடிகையை விவாகரத்து செய்த சீரியல் நடிகர் ஈஸ்வர், "நாங்கள் இருவரும் முறைப்படி பிரிந்து விட்டோம்" என்றும் "செட்டில்மென்ட் முடிந்துவிட்டது" என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

மீண்டும் இணைகிறார்களா ஜெயம் ரவி - ஆர்த்தி?  சமாதான பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் உத்தரவு..!

ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி சமரச பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை என்று மத்தியஸ்தர் தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் கூறப்பட்ட நிலையில், இருவரும் மீண்டும்