அல்லு அர்ஜூனனை சிறையில் அடைக்க  நீதிபதி உத்தரவு.. அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்..!

  • IndiaGlitz, [Friday,December 13 2024]

'புஷ்பா 2’ திரைப்படம் ரிலீஸான தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் உயிரிழந்த பெண் தொடர்பான வழக்கில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் என நீதிபதி உத்தரவிடப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஐந்தாம் தேதி, புஷ்பா 2 திரைப்படம் வெளியானபோது, ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ரேவதி என்ற பெண் தனது கணவர், குழந்தையுடன் படம் பார்க்க சென்றார். அந்த சமயத்தில் தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளர் உள்பட மூவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்ததால் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு, அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் கைது தெலுங்கு திரையுலகிலும், அவரது ரசிகர்களிடையிலும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

More News

தியேட்டரில் பெண் உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுன் கைது.. திரையுலகில் பரபரப்பு..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டரில் நெரிசல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் சற்றுமுன் கைது

நேரடியாக யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும் 'ரோஜா 2'.. சூப்பர் அறிவிப்பு..!

சன் டிவியில் ஒளிபரப்பான 'ரோஜா' என்ற சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 2 படங்கள் சூப்பர் ஹிட்.. 3வது படத்தில் விக்ரம்.. பிரபல இயக்குனரின் அடுத்த பட அப்டேட்..!

தமிழ் திரை உலகில் முதல் இரண்டு படங்களை சூப்பர் ஹிட் படமாக கொடுத்த பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன்லாலின் பரோஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. தமிழ் டிரைலர் எப்போது தெரியுமா?

மோகன்லாலின் " பரோஸ்"  திரைப்படம், டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில்  வெளியாகிறது  என்றும், அதுமட்டுமின்றி இந்த படத்தின்

முருகன் பெயரை சேர்த்த பிறகு வாழ்க்கை மாறிய அதிசயம்! - DNA ஜோதிடம்

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில், DNA ஜோதிட நிபுணர் ராகுல் சிங்காரவேல் அவர்கள், ஜோதிடத்தைப் பற்றிய புதிய பரிணாமம் குறித்து விளக்கியுள்ளார்.