சூர்யாவாக மாறிய அல்லு அர்ஜூன்

  • IndiaGlitz, [Tuesday,December 26 2017]

சமீபத்தில் நடந்த படவிழா ஒன்றில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மீது கோபம் அடைந்ததாக பரபரப்பான செய்தி வெளியான நிலையில் மீண்டும் ஒருமுறை அவர் ரசிகர்களிடம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் 'நா பேரு சூர்யா' என்ற படத்தின் விழா ஒன்றில் அல்லு அர்ஜூன் பேசியபோது ரசிகர்கள் இடைவிடாமல் கத்திக்கொண்டும் விசில் அடித்து கொண்டும் இருந்தனர். இதனால் ஆத்திரமான அல்லு அர்ஜூன், 'இதுபோன்ற விழாக்கள் ரசிகர்களை குஷிப்படுத்தும் என்றும் உற்சாக மிகுதியால் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்கள் என்றும் எனக்கு தெரியும். ஆனால் அதே நேரத்தில் பேசுபவர்களை ரசிகர்களின் செயல்கள் இடைஞ்சலாக இருக்க கூடாது. இதனால் நான் என்னுடைய நிதானத்தை இழக்க நேரிடும் சூழ்நிலை ஏற்படுகிறது என்று பேசினார்

இந்த நிகழ்ச்சியின் முடிவில் பேசிய அல்லுர் அர்ஜூன் சகோதரர் அல்லு சிரிஷ், 'அல்லு அர்ஜூன் பேசியதை யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம், நா பேரு சூர்யா என்ற படத்தில் சூர்யாவின் கேரக்டரில் நடித்து வரும் அவர், இன்னும் அந்த கேரக்டரில் இருந்து வெளியே வரவில்லை. அவர் தற்போது அர்ஜூன் அல்ல, சூர்யா' என்று நகைச்சுவையுடன் கூறி நிலைமையை சகஜமாக்கினார்.

More News

இரும்புத்திரை படத்தில் விஷால், சமந்தா கேரக்டர் அறிவிப்பு

விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 ரஜினி அரசியலுக்கு வருவது, அவரது குடும்பத்திற்கும் நல்லதல்ல: தமிழக அமைச்சர்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பது அனேகமாக வரும் 31ஆம் தேதி தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ரஜினி இப்போதைக்கு எம்.எல்.ஏ மட்டும் ஆகலாம், முதல்வராக முடியாது: பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களின் சந்திப்பின்போது வரும் 31ஆம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாக கூறிய நிலையில்

அரசியல் ஆழம் தெரிந்ததால்தான் அமைதியாக உள்ளேன்: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களை இரண்டாம் கட்டமாக சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து வருகிறார்.

ஜீவாவுக்கு ஜோடியாகும் அர்ஜூன் ரெட்டி நாயகி

ஜீவா நடித்த 'கலகலப்பு 2' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'கீ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நிக்கிகல்ராணி அவருக்கு ஜோடியாக நடிக்கின்றார்