சூர்யாவை முந்திய அல்லு அர்ஜுன்.. ஆனால் 'கங்குவா' சாதனை இதை விட பெருசு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக பான் இந்திய திரைப்படம் என்றால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தான் உருவாகும் என்பது வழக்கமான ஒன்றாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படம் பத்து மொழிகளில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ’புஷ்பா 2’ திரைப்படம் ஆறு மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ’கங்குவா’ படத்திற்கு முன்பு வெளியாகி விடும் என்பதால் ஆறு மொழிகளில் வெளியாகும் முதல் தென்னிந்திய படம் என்ற பெருமையை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
’புஷ்பா 2’ படத்தின் குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளுடன் பெங்காலி மொழியில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் தமிழ் மொழி போஸ்டரில் ’நீ தாடி நீவும் அழகே பக்கா.. கூடி நிக்கும் ஊரு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
’புஷ்பா 2’ திரைப்படம் ஆறு மொழிகளில் வெளியானாலும் ’கங்குவா’ திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது என்றும் ’புஷ்பா2’ படத்தை விட ’கங்குவா’ படத்தின் சாதனை பெருசு தான் என்றும் சூர்யா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் பான் இந்திய அளவில் ஆறு மொழிகளில் வெளியாகும் படம் என்று பெருமையாக அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ’புஷ்பா 2’ பட போஸ்டரை வைரல் ஆக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
SIX languages 🔥
— Pushpa (@PushpaMovie) May 1, 2024
ONE man 🕺
ONE chant 🎼
Get ready to sing the praise of Pushpa Raj with #PushpaPushpa from 5:04 PM ❤🔥❤️🔥#Pushpa2FirstSingle #Pushpa2TheRule pic.twitter.com/FpJu3blWDG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com