தமிழ் உள்பட 5 மொழிகளில் ஃபர்ஸ்ட் சிங்கிள்: 'புஷ்பா' படக்குழுவினர்களின் அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கிவிட்டது. இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஐந்து மொழிகளில் ஐந்து பாடகர்கள் பாடியுள்ள இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியில் விஷால் தத்லானி, கன்னடத்தில் விஜய் பிரகாஷ், மலையாளத்தில் ராகுல் நம்பியார், தெலுங்கில் சிவம் மற்றும் தமிழில் பென்னி தயால் பாடிய இந்த பாடல் ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியாக உள்ளதால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்
சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
Happy birthday my dear friend @ThisIsDSP. Can’t wait for the world to witness the fantastic album you have composed for #Pushpa, and fall in love with you and your music yet again. Keep entertaining us with your magic. pic.twitter.com/Xnd1aML2QC
— Allu Arjun (@alluarjun) August 2, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments