அதிகமுக கொள்கை தவறாது… சிறுபான்மையினருக்கு நம்பிக்கை ஊட்டிய தமிழக முதல்வர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினர் அச்சப்பட தேவையில்லை என்று ஆதரவு வார்த்தைக் கூறி இருக்கிறார். இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அப்படி ஒரு நிலைமை எப்போதும் இருந்ததில்லை என்று தமிழக முதல்வர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், கூட்டணி வேறு, கொள்கை வேறு என்றும் சிறுபான்மையினர் அச்சப்பட தேவையில்லை என்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கயை ஏற்படுத்தி இருக்கிறார். அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னையின் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் கிறிஸ்துவர்களின் புனித தலமான ஜெருசலேம் செல்வதற்கு புனித பயணத்திற்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து 37,000 ஆயிரமாக உயர்த்தப்படும் எனக் கூறினார். மேலும் கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று கூறிய அவர், அதிமுக என்றும் தனது கொள்கையின்படியே நிற்கும் என்றும் தெரிவித்தார். இதனால் சிறுபான்மையினர் அச்சப்பட தேவையில்லை என்றும் முதல்வர் மக்கள் மத்தியில் நம்பிக்கை வார்த்தைகளை கூறி அங்கிருந்தவர்களை மகிழ்வித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout