ஜெயம்ரவி- சமுத்திரக்கனி படத்தில் இணையும் பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,June 28 2016]

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி தற்போது 'போகன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அவர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகும் 'தொண்டன் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமுத்திரக்கனி இயக்கிய 'அப்பா' திரைப்படம் வரும் ஜூலை 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆனதும் சமுத்திரக்கனி 'தொண்டன்' படத்தின் ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் 'தொண்டன்' படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு 'அல்லரி' என்ற படத்தில் அறிமுகமாகிய அல்லரி ரமேஷ் சமுத்திரக்கனி இயக்கிய 'போராளி' படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொண்டன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த முழு தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

'சிங்கப்பூர்' SIIMA விழாவில் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு

'அரிமாநம்பி' ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது...

ரஜினிக்கு குரல் கொடுத்த மலேசிய ஆர்ட்டிஸ்ட் இவர்தான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் ரிலீஸ் தேதி...

மலேசியாவில் இரண்டு முறை ரிலீஸ் ஆகிறது 'கபாலி'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் வரும் ஜூலை 15ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது...

சிபிராஜின் 'ஜாக்சன் துரை' திரை முன்னோட்டம்

கடந்த 2003ஆம் ஆண்டு 'ஸ்டுடண்ட் நம்பர் 1' என்ற படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகமான சத்யராஜின் மகன் சிபிராஜ், அதன் பின்னர் ஆரம்பகாலத்தில் தந்தை சத்யராஜூடன் மட்டுமே நடித்தார்...

'கபாலி' ரிலீசுக்காக காத்திருக்கும் தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படம் வரும் ஜூலை 15-ல் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.