இந்திய அணியை கதறவிட்ட இளம் வீரர்… யார் இந்த ரச்சின் ரவீந்திரா?
- IndiaGlitz, [Thursday,December 02 2021] Sports News
நியூசிலாந்துக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றிப்பெற்றிருக்கும். ஆனால் நியூசிலாந்து இளம் வீரர் ஒருவரின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய அணி திணறியதோடு வெற்றியையும் இழக்க வேண்டியிருந்தது. அந்த நபரின் பெயர்தான் ரச்சின் ரவீந்திரா.
22 வயதான ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். இடதுகை சுழற்பந்து வீச்சாளராக இருந்துவரும் இவர் ஒரு ஆல்ரவுண்டர் என்பதை இந்திய வீரர்கள் கணிக்கத் தவறிவிட்டனர். இவருடைய விக்கெட்டை எடுக்க முடியாமல்தான் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்து டிரா செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் “ரச்சின் ரவீந்திரா“ எனும் பெயர் குறித்து ரசிகர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து வீரராக இருந்தாலும் அவர் அடிப்படையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். பெங்களூரை சேர்ந்த ரவி கிருஷ்ணன் தம்பதிகள் கடந்த 90 களில் ஆர்க்கிடெக்ட் சிஸ்டம் எனும் நிறுவனத்துடன் இணைந்து நியூசிலாந்தில் குடிபெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு கடந்த 1999 இல் பிறந்தவர் ரச்சின். ரவி கிருஷ்ணன் ஏற்கனவே பெங்களூருவில் இருந்தபோது கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்துள்ளார். இவர் ஸ்ரீநாத்துடன் நெருக்கமான உறவுடன் இருந்து வந்துள்ளார்.
மேலும் தனக்கு கிரிக்கெட் வீரர் ராகுல் மற்றும் சச்சின் மீதுள்ள பற்றின் காரணாக தனது மகனுக்கு ராகுல் டிராவிட்டின் பெயரில் உள்ள “ரா“வையும் சச்சின் பெயரில் உள்ள “சின்“னையும் இணைந்து ரச்சின் ரவீந்திரா எனப் பெயர் வைத்துள்ளார். மேலும் நீயூசிலாந்தில் ஹட் ஹாக்ஸ் எனும் பெயரில் அகாடமியையும் நடத்தி வருகிறார். இந்த அகாடமியில் பயிற்சி பெற்று ரச்சின் வளர்ந்துள்ளார்.
இந்நிலையில் ரச்சின் ஹட் ஹாக்ஸ் அணிக்காக இந்தியாவில் பலமுறை கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். இதனால் இந்தியக் கிரிக்கெட் பிட்ச் எப்படி இருக்கும் என்பது வரைக்கும் ரச்சினுக்கு அத்துபடியாக இருக்கிறது. மேலும் ரச்சின் இளம் வயதிலேயே பல சாதனைகளுடன் அண்டர் 19 நியூசிலாந்து கிரிகெட் அணியின் முக்கிய வீரராக இருந்துவந்துள்ளார் மேலும் அந்த அணி உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிஇருக்கறார்.
அதைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் அண்டு பங்களாதேஷ்க்கு எதிரான டி20 போட்டியில் களம் இறங்கினார். அந்தப் போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் அதற்கு அடுத்த போட்டியில் 4 ஓவருக்கு 22 ரன்கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார். மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்துக்கான சர்வதேசப் போட்டியில் விளையாடிவரும் இவர் இதுவரை 29 போட்டிகளில் 1,626 ரன்களை குவித்திருப்பதோடு 3 சதம் 10 க்கும் மேற்பட்ட அரைச் சதத்தை வீழ்த்தியிருக்கிறார்.
இந்நிலையில் கான்பூரில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விளையாடி நியூசிலாந்துக்கு டிரா செய்யும் வாய்ப்பை பெற்றுத்தந்துள்ளார். இதனால் ஒரே நாளில் உலகம் முழுவதும் கவனம் பெற்ற வீரராகவும் அவர் மாறியிருக்கிறார். இதனால் ரச்சின் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதோடு ராகுல் டிராவிட் மற்றம் சச்சின் பெயரை காப்பாற்றி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.