'மாஸ்டர்' முதல்நாள் முதல்காட்சி டிக்கெட்டை என்கிட்ட யாரும் கேட்காதீங்க: அர்ச்சனா கல்பாதி!

  • IndiaGlitz, [Saturday,November 28 2020]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் பலமுறை உறுதி செய்து இருந்தனர். ஆனால் திடீரென நேற்று முதல் இந்த படம் ஓடிடியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் வரும் பொங்கல் தினத்தில் முன்னணி ஓடிடி பிளாட்பாரம் ஒன்றில் ’மாஸ்டர்’ வெளியாக இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

’மாஸ்டர்’ போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளிவந்தால் மட்டுமே ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்றும், அது மட்டுமின்றி கொரோனாவுக்கு பின் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவதற்கு தயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ’மாஸ்டர்’ போன்ற திரைப்படம்தான் திரையரங்குகளுக்கு பார்வையாளர்களை வரவழைக்கும் படமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது

இந்த நிலையில் விஜய்யின் ’பிகில்’ படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டரில், ‘2021ஆம் ஆண்டில் ’மாஸ்டர்’ படத்தை எங்களுடைய ஏஜிஎஸ் சினிமாவில் பார்க்க மிகவும் ஆவலுடன் உள்ளேன். ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் தான் வரும் என்று போலி செய்திகளை பரப்பி வருபவர்கள், என்னிடம் ’மாஸ்டர்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டை கேட்க வேண்டாம் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்

அதேபோல் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவிருப்பதாக செய்திகளில் பார்த்தேன். அந்த படம் திரையரங்குக்கு வந்தால் மட்டுமே எனக்கு மகிழ்ச்சி, உங்களுக்கு எப்படி? என்று நடிகை ராதிகாவும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.