இன்றைய நாளிதழ்களில் வந்த 4 பக்க விளம்பரங்கள்: அதிமுகவின் இறுதி வியூகம்
- IndiaGlitz, [Sunday,April 04 2021]
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று இரவு ஏழு மணி உடன் பிரசாரம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரவு 7 மணிக்கு மேல் நேரடியாகவோ, தொலைக்காட்சி வானொலி மூலமாகவோ, சமூக வலைதளங்கள் மூலமாகவோ, பத்திரிக்கைகள் மூலமாகவோ, தேர்தல் பிரச்சாரம் மற்றும் விளம்பரம் செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறியும் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தன என்பது தெரிந்ததே. ’வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற தலைப்பில் அதிமுகவும், ஸ்டாலின்தான் வர்றாரு, விடியலை தர்றாறு’ என்ற தலைப்பில் திமுகவும் விளம்பரம் செய்து வந்தன
இந்த நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் முன்னணி நாளிதழ்கள் அனைத்திலும் நான்கு பக்க விளம்பரங்கள் அதிமுக தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள், முறைகேடுகள் நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட செய்திகளே விளம்பரமாக உள்ளன. இன்றைய தமிழின் அனைத்து முன்னணி நாளிதழிலும் இந்த விளம்பரம் வெளிவந்துள்ள நிலையில் அதிமுகவின் இறுதி கட்ட யுக்தியாகவே இவை பார்க்கப்படுகின்றன
குறிப்பாக இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் அனைவரும் நாளிதழ்களை ஆர அமர படிக்கும் நாள் என்பதால் இன்றைய நாளில் இந்த விளம்பரங்கள் வந்துள்ளதால் அவை அதிக அளவு பொது மக்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பாராத வியூகத்தை திமுகவே எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது