1-8 ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ்... மீண்டும் பள்ளி திறப்பு எப்போது?
- IndiaGlitz, [Tuesday,June 01 2021]
தமிழகத்தில் 1-8 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் அனைத்து மாணவர்களும் (2020-202) இந்தக் கல்வியாண்டில் தேர்ச்சிப் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்து உள்ளார்.
மேலும் அடுத்த கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வு ஏற்படும்போது அது குறித்து அறிவிப்பு வெளிவரும் எனவும் பள்ளிகள் திறந்தவுடன் பாடப்புத்தகம் மற்றும் இதர நலத்திட்டங்கள் வழங்கப்படும் எனவும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வது தாமதமாகும்.
இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் ஏற்படும்போது பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். மாணவர்களின் நலனை கருதி இத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. அதேநேரத்தில் மாணவர்களின் உடல் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே பொறுமையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.