அனைத்து தெருக்களும் மூடப்பட்டதால் சென்னை புதுப்பேட்டையில் பரபரப்பு!

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு அதனை பெரும்பாலான மக்களும் கடைபிடித்து வருகின்றனர் இருப்பினும் ஒரு சில அத்தியாவசிய தேவை மற்றும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதால் கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி டெல்லி மத மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு தமிழகம் திரும்பி வந்தவர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பம் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் அவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சென்னை புதுப்பேட்டையில் உள்ள அனைத்து தெருக்களும் தடுப்புகளை வைத்து காவல்துறையினர் திடீரென மூடியுள்ளனர். அதுமட்டுமன்றி வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் காவல்துறையினர் அந்த பகுதி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். திடீரென சென்னையின் முக்கிய பகுதியான புதுப்பேட்டையில் உள்ள அனைத்து தெருக்களும் மூடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

More News

அடுப்பு பற்றவைக்கவே வசதியில்லை, விளக்கேற்றுவது எப்படி? 'மாஸ்டர்' பட பிரபலம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசிய போது 'கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்

கொரோனாவுக்கு எதிரான போர்: ரூ.1.25 கோடி கொடுத்த பிரபல நடிகர்

கொரோனாவுக்கு எதிராக நாடே போராடி கொண்டிருக்கும் நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக திரையுலகை சேர்ந்த பலர் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் அரசுக்கு உதவி

நான் கொரோனாவை விட மோசமானவன்: போலீசிடம் வாக்குவாதம் செய்த வாலிபர் கைது

சமீபத்தில் சிவகங்கையை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரிடம் 'கொரோனாவை என் கண் முன் காட்டு, முதலமைச்சரை என் முன்னால் வந்து நின்று நிற்கச்சொல்' என வீராவேசம்

கொரோனாவுக்கு பழந்தமிழ் வைத்தியம்!!! வாட்ஸ் அப்பில் பரவிவரும் தகவலை நம்பலாமா???

கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப் முதற்கொண்டு அனைத்து சமூக வலைத் தளங்களிலும் கொரோனாவுக்கு மருந்து என்ற பெயரில், சில புத்தகத் தாள்கள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது

அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா: ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றினாலும் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி விட்டது. உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி இருந்தாலும்