சென்னையில் அனைத்து தனிக்கடைகளும் செயல்பட அனுமதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் அனைத்து தனிக்கடைகளும் செயல்பட அனுமதி என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நிபந்தனைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஹார்டுவேர் கடைகள், சிமெண்ட் கட்டுமான கடைகள், செல்போன் கடைகள் ஆகியவை தனிக்கடைகளாக இருந்தால் சமூக இடைவெளியை பின்பற்றி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்.
அதேபோல் கட்டுமானப்பொருட்கள் எடுத்துச் செல்ல தடை கிடையாது என்று தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ள சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று இல்லாத பகுதிகளில் கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில் அக்கட்டுமான பணிகளுக்கு அனுமதி என அறிவித்துள்ளது.
மேலும் 25% பணியாளர்களுடன் பொருளாதார சிறப்பு மண்டலங்கள், ஏற்றுமதி நிறுவனம் செயல்படலாம் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏ.சி மெக்கானிக், தச்சர் ஆகியோர் அனுமதி பெற்று தொழில் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் 10% பணியாளர்களுடன் ஐ.டி.நிறுவனங்கள் செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சென்னையில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்படுவதற்கு அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout