கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுமா? புது தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் காலவரம்பின்றி ஒத்தி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
முன்னதாக டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த கல்லூரி, பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள் மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் ஜனவரி 20 ஆம் தேதி நடைபெறாது என்றும் மேலும் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்படுவதாகவும் அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
முன்னதாக செமஸ்டர் தேர்வுகளை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு 20 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தேர்வு தேதியும் தற்போது ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால் மாணவர்கள் இந்த நாட்களில் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தாலும் செய்முறை தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் வைரஸ் பரவல் குறைந்த பின்னர் செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி அறிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments