1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்- உ.பி. முதல்வர் யோகியின் அதிரடி அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காகப் பல மாநிலங்கள் விடுமுறை அளித்து, பள்ளிகளை இழுத்து மூடி வருகின்றன. இது பொதுத் தேர்வு காலம் என்பதாலும் கோடை விடுமுறை காலம் வரப்போகிறது என்பதாலும் பல மாநிலங்களில் தேர்வுகளும் ரத்து செய்யப் படுகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
தற்போது இந்தியாவில் கொரோனாவின் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல மாநில அரசுகள் தங்களது பள்ளிகளுக்கு தேர்வுகளையும் ரத்து செய்து அறிவித்து இருக்கிறது.
கர்நாடக மாநிலம் மார்ச் 13 ஆம் தேதி, 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை பள்ளித் தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது. முன்பு நடைபெற்ற இருபருவ மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து, தேர்ச்சி குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப் பட்டு இருக்கிறது. மேலும், இது கர்நாடகத்தின் 4 கல்வி மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும், அனைத்து மாவட்டங்களுக்கும் அல்ல என்பதையும் அரசு தெளிவு படுத்தி இருந்தது.
உத்திரப் பிரதேசம் இன்னும் ஒருபடி மேலே சென்று 8 ஆம் வகுப்பு வரை பள்ளி தேர்வுகளை ரத்து செய்து அறிவித்து இருக்கிறது. ஏப்ரல் 2 வரை பள்ளிகள் மூடப் பட்டு இருப்பதால் மாணவர்கள் தேர்வுகளை எழுத வேண்டாம் என்று அம்மாநில அரசு அறிவித்து இருக்கிறது. தேர்வு எழுதாமலே மேல் வகுப்புகளுக்கு செல்ல முடியும் என்ற அறிவிப்பினால் மாணவர்கள் தற்போது உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகக்காக மார்ச் 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout