பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்- தமிழக முதல்வர் வேண்டுகோள்!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தமிழக முதல்வர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 3,606 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை மொத்தம் 36 லட்சத்து 14 ஆயிரம் தடுப்பூசிகள் பெறப்பட்டு உள்ளது. இதில் 30.47 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் 5.6 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

இதுவரை மொத்தமாக 11 லட்சத்து 25 ஆயிரத்து 703 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் கோவிஷீல்ட் தடுப்பூசியை 10 லட்சத்து 98 ஆயிரத்து 857 பேரும், கோவேக்சின் தடுப்பூசியை 26 ஆயிரத்து 846 பேரும் போட்டுக் கொண்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தற்போது நாம் பணி நிமித்தமாக அத்யாவசிய தேவைகளுக்காக ஏதேனும் நிகழ்வுகளுக்காக வெளியில் செல்கிறோம். இப்படியான நேரத்தில் நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்’‘ எனத் தெரிவித்தார். மேலும் கொரோனா தடுப்புக்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் அவர் செய்தியாளர்கள் முன்னிலையில் எடுத்துக் கூறினார்.

More News

அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவேக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் செயல்பாட்டில் உள்ளன.

80-90 களின் முன்னணி நகைச்சுவை நடிகர் பா.ஜ.கவில் இணைந்தார்!

தமிழ் சினிமாவில் கடந்த 80-90 களில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தில்.

நான் இப்போது அந்த மனநிலையில் இல்லை: பிக்பாஸ் ஷிவானியின் க்யூட் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே இன்ஸ்டாகிராமில் தினமும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை பரபரப்பை ஏற்படுத்தியவர் ஷிவானி என்பது தெரிந்ததே

ஒரே வருடத்தில் மூன்று விஜய் படங்கள் ரிலீஸா?

தளபதி விஜய் நடித்த திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகாத நிலையில் இந்த ஆண்டு அவர் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது.

'தளபதி 65' படத்திற்காக இத்தனை நாள் கால்ஷீட் கொடுத்தாரா பூஜா ஹெக்டே?

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கவுள்ள 'தளபதி 65' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே