கேரள சூர்யா ரசிகர்களின் போலீஸ் புகார்

  • IndiaGlitz, [Sunday,February 05 2017]

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி 3' திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது. முதல் இரண்டு பாகங்கள் நல்ல வெற்றியை பெற்றதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 'சி 3' படத்தை முதல்நாளே தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் வெளியிடுவோம் என்று பகிரங்கமாக அறிவித்ததற்கு நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆவேசமாக கண்டனம் தெரிவித்தார் என்பதை பார்த்தோம்.

தற்போது கேரளாவில் உள்ள சூர்யாவின் ரசிகர்கள் இதுகுறித்து ஹைடெக் செல் காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஒருசில இணையதளங்கள் 'சி 3' படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுத்து நிறுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த புகாருக்கு காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் 'சி3' படம் இணையதளத்தில் ரிலீஸ் செய்வது, மற்றும் திருட்டு டிவிடி வெளியாவதில் இருந்து தப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'பைரவா' படக்குழுவுக்கு இளையதளபதியின் இனிய பரிசு

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளிவந்து திருப்திகரமான வசூலை தந்து கொண்டிருக்கின்றது. கலவையான விமர்சனம், ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவற்றையும் மீறி விநியோகிஸ்தர்களுக்கு லாபம் தந்த படங்களில் ஒன்றாக ''பைரவா' இருந்ததால் படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர்...

வேட்புமனு தாக்கல் செய்தவுடன் விஷாலின் அதிரடி அறிவிப்பு

நீதிமன்ற உத்தரவை அடுத்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விஷாலின் மன்னிப்பை ஏற்று சஸ்பெண்டை ரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். சஸ்பெண்ட் ரத்து செய்த சில நிமிடங்களில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக விஷால் அறிவித்தார்.

சசிகலா முதல்வர் ஆனபின் பொறுக்கிகளை அடக்க வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி

ஜல்லிக்கட்டு பிரச்சனை உச்சத்தில் இருந்த போது பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழர்களை தனது சமூக வலைத்தளத்தில் 'பொறுக்கி' என்று கூறி இழிவுபடுத்தினார்.

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் தோனி மனைவிக்கு தொடர்பா?

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு ஒன்றில் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிரதமருக்கு கவுதமி கடிதம் எழுதியது உண்மையா? அதிர்ச்சி தகவல்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல சந்தேகங்களை எழுப்பிய நடிகை கவுதமி, இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.