ஐபிஎல் கேப்டன்கள் அனைவரும் இந்தியர்களே! முதல்முறை நடைபெறும் அதிசயம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 10ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 11வது ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில் இப்போதே ஐபிஎல் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு காரணமாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதே விவகாரத்தில் வார்னரும் சிக்கியுள்ளதால் ஐதரபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்படுவார் என்றும் அவருக்கு பதிலாக தவான் கேப்டனாக நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. வார்னர் நீக்கப்பட்டால் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக போட்டியில் கலந்து கொள்ளும் 8 அணிகளின் கேப்டன்களும் இந்திய வீரர்களே என்ற நிலை ஏற்படும்.
இதோ ஐபிஎல் அணிகளின் கேப்டன்களின் பட்டியல்
1. சென்னை சூப்பர் கிங்ஸ் - தோனி
2. மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா
3. ராயல் சேலஞ்ச் பெங்களூரு - விராத் கோஹ்லி
4. சன் ரைசஸ் ஐதராபாத் - தவான் (வார்னர் நீக்கப்பட்டால்)
5. ராயல் ராஜஸ்தான் - ரஹானே
6. கிங்ஸ் லெவன் பஞ்சாப் - அஸ்வின்
7. டெல்லி டேர்டெவில்ஸ் - கவுதம் காம்பீர்
8. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - தினேஷ் கார்த்திக்
இந்த எட்டு அணிகளில் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com