மொத்த நாடும் ஒரே நேரத்தில் கைதட்டியது: கொரோனாவை விரட்ட இந்த ஒற்றுமை போதும்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை தன்னலம் கருதாது காப்பாற்றும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வந்து கைதட்டி ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை சரியாக 5 மணிக்கு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே வந்து கைதட்டி மருத்துவர்களுக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் கைதட்டி நன்றி தெரிவித்தனர். அதேபோல் திரையுலக பிரபலங்கள் பலரும் வீட்டிற்கு வெளியே வந்தும், பால்கனியில் இருந்தும் கைதட்டி தங்களுடைய நன்றியை தெரிவித்தனர்.
ஒரு இயற்கை பேரிடை நேரிடும்போது ஜாதி, மத, இன பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்று கூடுவர் என்பதை ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கின்றோம். அந்த வகையில் மீண்டும் மக்கள் ஒன்று கூடியுள்ளது பெருமையாக பார்க்கப்படுகிறது. இந்த ஒற்றுமை போதும் கொரோனோ வைரஸை விரட்ட என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.
Favorite Tweetsby @igtamilFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com