த்ரிஷாவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Thursday,December 20 2018]

நடிகை த்ரிஷாவுக்கு இந்த 2018ஆம் ஆண்டு சூப்பர் ஆண்டாக அமைந்துள்ளது. அவர் நடித்த '96; திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது மட்டுமின்றி அவருடைய கனவான ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதும் 'பேட்ட' படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.

இந்த நிலையில் அவர் தற்போது 'கர்ஜனை, 'சதுரங்க வேட்டை 2', '1818' மற்றும் 'பரமபத விளையாட்டு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் த்ரிஷா நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே நடிப்பில் டான் சாண்டி என்பவர் இயக்கி வரும் 'கொரில்லா' என்ற படத்தை தயாரிக்கும் நிறுவனமான 'ஆல் இன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அடுத்த படத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த முழு தகவல்கள் மிக விரைவில் முறைப்படி அறிவிக்கப்படவுள்ளன.

More News

ஜிவி பிரகாஷின் '100% காதல்' சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமாவுலகில் ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களை ரிலீஸ் செய்து வரும் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்த ''நாச்சியார்', 'செம' ஆகிய திரைப்படங்கள்

விஸ்வாசம்: தல்லே தில்லாலே பாடல் விமர்சனம்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே

சென்னையில் 2018ஆம் ஆண்டில் பெஸ்ட் வசுல் செய்த படங்கள்!

2018ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த பத்து திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

'சீதக்காதி'க்கு வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 25வது படமான 'சீதக்காதி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

'பேட்ட'யை அடுத்து சன்பிக்சர்ஸின் அடுத்த பட ரிலீஸ் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.