நிரம்பி வழியும் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்: மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகோள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 20 ஆயிரம் என அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்.
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளை அட்மிட் செய்ய படுக்கைகள் காலி இல்லை என்பது அதிர்ச்சிக்குரிய உண்மையாகும். ஆனால் இதன் தீவிரம் புரியாமல் பொதுமக்கள் இன்னும் மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பது பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் உள்ள முக்கிய மருத்துவமனைகளான ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனை ஆகியவற்றில் ஆம்புலன்ஸில் வரிசையாக கொரோனா நோயாளிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர். நோயாளிக்கான படுக்கை காலியாக இல்லாத காரணத்தினால் ஆம்புலன்சில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்படும் நிலை தான் தற்போது உள்ளன
அதே போல் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் மருத்துவமனையின் வெளியே நோயாளிகள் காத்துக் கொண்டிருக்கும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தயவு செய்து இதனை சீரியசாக எடுத்துக்கொண்டு முடிந்தவரை வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் என்றும், ஒருவேளை தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளியே செல்லும் நிலைமை ஏற்பட்டால் கண்டிப்பாக டபுள் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Government and private hospitals in Chennai are overwhelmed. This is not to spread panic, but people in Chennai need to realise the seriousness of the situation and understand what we are up against.
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) May 4, 2021
Below are visuals from 3 major govt hospitals in the city.
Stanley Hospital: pic.twitter.com/masfc0AUsQ
The situation is the same at Omandurar too. pic.twitter.com/wtFcT1oFdh
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) May 4, 2021
Genuine request to everyone: Wear a mask properly, sanitize your hands frequently, don't step out of your homes unnecessarily. Let's do all that we can to break the chain.
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) May 4, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments