நிரம்பி வழியும் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்: மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகோள்!

  • IndiaGlitz, [Tuesday,May 04 2021]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 20 ஆயிரம் என அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்.

தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளை அட்மிட் செய்ய படுக்கைகள் காலி இல்லை என்பது அதிர்ச்சிக்குரிய உண்மையாகும். ஆனால் இதன் தீவிரம் புரியாமல் பொதுமக்கள் இன்னும் மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பது பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் உள்ள முக்கிய மருத்துவமனைகளான ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனை ஆகியவற்றில் ஆம்புலன்ஸில் வரிசையாக கொரோனா நோயாளிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர். நோயாளிக்கான படுக்கை காலியாக இல்லாத காரணத்தினால் ஆம்புலன்சில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்படும் நிலை தான் தற்போது உள்ளன

அதே போல் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் மருத்துவமனையின் வெளியே நோயாளிகள் காத்துக் கொண்டிருக்கும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தயவு செய்து இதனை சீரியசாக எடுத்துக்கொண்டு முடிந்தவரை வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் என்றும், ஒருவேளை தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளியே செல்லும் நிலைமை ஏற்பட்டால் கண்டிப்பாக டபுள் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

More News

வந்துவிட்டது சுட்டெரிக்கும் கத்திரி வெயில்… என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

மே மாதம் வந்துவிட்டாலே ஒவ்வொருவருக்கும் கொணட்டாம்தான். காரணம் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு கிடைக்கும்.

அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர்… தலைமை செய்தது என்ன?

சென்னை முகப்பேர் கிழக்கு ஜேஜே நகர் பகுதியில் செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தை திமுகவினர் சிலர் அடித்து நொறுக்கியதாகச் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது.

பாலம் உடைந்து மெட்ரோ ரயில், சாலையில் சரிந்த கொடூரம்… பதைக்க வைக்கும் வீடியோ!

வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ சிட்டியில் ஒரு மெட்ரோ ரயில் பாலம் உடைந்ததால் ஓடிக்கொண்டு இருந்த ரயில் பாலத்தோடு சேர்ந்து சாலையில் விழுந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

விஜயகாந்த் - உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு: என்ன காரணம்?

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்

ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியை அளித்த பிசிசிஐ!

2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை 29 போட்டிகள் நடைபெற்று உள்ள நிலையில் நேற்று நடைபெற வேண்டிய 30வது போட்டி திடீரென ஒத்திவைக்கப்பட்டது