நிர்பயா குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்பட்டது தூக்கு தண்டனை: 7 வருட சட்டப்போராட்டத்திற்கு முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லி மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா, கடந்த 2012ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகள் நால்வருக்கும் சற்றுமுன் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நிர்பயா தாயாரின் 7 வருட சட்டப்போராட்டத்திற்கு முடிவு கிடைத்துள்ளது.
தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க நேற்று நள்ளிரவு கூட குற்றவாளிகளின் தரப்பில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அனைத்து சட்ட வழிகளும் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி இன்று அதிகாலை 5.30 மணிக்கு குற்றவாளிகளான அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுடைய உடல் அரை மணி நேரம் தூக்கிலிடப்பட்டதாகவும் அதன்பின் நால்வரும் மரணம் அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
முன்னதாக 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதும் திஹார் சிறையின் முன் கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout