கோயில் திருவிழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு அனுமதி எப்போது??? வெளியான முக்கிய அறிவிப்பு !!!
- IndiaGlitz, [Monday,January 04 2021]
கொரோனா தாக்கம் காரணமாக தமிழகக் கோயில்களில் கடந்த மார்ச் 24 முதல் வழக்கமான பூஜை மற்றும் திருவிழாக்கள் இல்லாமல் இருக்கிறது. பின்னர் கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டபோது கடந்த செப்டம்பர் மாதம் முதல் கோவில் வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் மற்ற நேரங்களைவிட குறைவாகவே பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். மேலும் கோவில் நடை இரவு 8 மணிக்கே மூடப்பட்டு விடுகிறது.
இந்நிலையில் வழக்கமான பூஜை மற்றும் கோயில் வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் தமிழக அறநிலையத் துறையின் நெறிகாட்டுதலை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் வரும் 18 ஆம் தேதி முதல் தமிழக கோயில்களில் விழாக்கள் உட்பட நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள தமிழக அறநிலையத்துறை அனுமதி வழங்கி இருக்கிறது.
இந்த அனுமதியால் இனி தமிழகக் கோயில்களில் வழக்கமான திருவிழா மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தவும், வழக்கமான நேர நடைமுறையை பின்பற்றி வழிபாட்டு தலங்களில் வழிபாடு நடத்தவும் தமிழக அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இனி வழக்கமான திருவிழாக்கள் உட்பட எல்லா நிகழ்ச்சிகளையும் கோயில்களில் நடத்திக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் இதற்காக வேறு யாரிடம் சிறப்பு அனுமதியும் பெற தேவையில்லை என்றும் தமிழக அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.