கூல் சுரேஷை கார்னர் செய்த ஒட்டு மொத்த போட்டியாளர்கள்.. பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,October 18 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கூல் சுரேஷை கார்னர் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய முதல் புரமோவில் பிக் பாஸ் இடம் இருந்து வந்த அறிவிப்பு ஒன்றை ரவீனா வாசிக்கிறார். அதில் ’இதுஒரு சாபக்கல், எந்த நபருக்கு இந்த சாபக்கல் சென்று சேருகிறதோ, அவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, அடுத்த வாரம் நேரடியாக நாமினேசன் செய்யப்படுவார் என்று கூற, கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் இந்த சாபக்கல் கூல் சுரேஷுக்கு செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதனால் ஆவேசமடைந்த கூல் சுரேஷ் ’நான் சீரியஸாக தான் கேட்கிறேன், உங்களுக்கு ஒரு இழிச்சவாயன் வேண்டும், அதற்கு நீங்கள் என்னை தேர்வு செய்வீர்களா, ஏமாந்த ஆள் என்ன மட்டும் வச்சு செய்யுங்கப்பா, நானே சாபக்கல் எடுத்துக்கிறேன் என்று ஆத்திரமடைந்து கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இனி கூல் சுரேஷின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.