பிக்பாஸில் இப்படி ஒருவர் இல்லாமலே இருந்திருக்கலாம்.. ஒரே ஒருவரை குறி வைக்கும் சக போட்டியாளர்கள்!

இப்படி ஒரு போட்டியாளர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லாமல் இருந்திருக்கலாம் என்றால் எந்த போட்டியாளரை நீங்கள் குறிப்பிடுவீர்கள் என கமல்ஹாசன் கேட்கும் கேள்வி இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது புரமோ வீடியோவாக உள்ளது.

இந்த கேள்வியை கமலஹாசன் கேட்டவுடன் அமுதவாணன் விக்ரமனை கூறி அதற்கான காரணத்தைக் கூறுகிறார். அதன்பின்னர் தனலட்சுமியை கூறும் ரக்ஷிதா, ‘எல்லோருடனும் இன்னும் கொஞ்சம் டைம் செலவழித்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறுகிறார்.

இதனை அடுத்து தனலட்சுமியை குறிப்பிடும் ஜனனி, ‘தன்னை மட்டுமே பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரே தவிர மற்றவருடைய தொடர்பை அவர் விரும்பவில்லை என்று தனலட்சுமி குறித்து கூறுகிறார்.

மொத்தத்தில் தனலட்சுமியை சக போட்டியாளர்கள் குறி வைப்பது போல் தெரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தனலட்சுமியின் வியூகம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.