தென் கொரியாவுடன் இருக்கும் அனைத்துத் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்படும்!!! காட்டத்தில் வட கொரியா!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகிலேயே மிகவும் மர்மமான நாடாகவும், சர்வதேச அளவில் அச்சுறுத்தும் நாடாகவும் கருதப்படும் வடகொரியா தற்போது தென் கொரியாவுடன் இருக்கும் அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. வட கொரியா தொடர்ந்து ராக்கெட் சோதனையில் ஈடுபட்டு வருவதாக உலகநாடுகளுக்கு தென் கொரிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. கடந்த பிப்ரவரி மாதத்திலும் வட கொரியா ராக்கெட் ஏவுகணையில் ஈடுபட்ட செய்தியை தென் கொரிய ஊடகங்கள்தான் வெளிப்படுத்தியது. வட கொரிய அதிபர் கிம் ஜான் உன் உயிரிழந்து விட்டதாக உலக நாடுகளில் பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டபோது அதை உறுதியாக தென் கொரியா மறுத்தது. கடைசியில் வட கொரிய அதிபர் கிம் ஜான் உன் வெளியுலகில் தோன்றி மர்ம செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்படி வட கொரியாவை பற்றி அனைத்துச் செய்திகளையும் மிகத் துல்லியமாக கவனித்து வரும் ஒருநாடாக தென் கொரியா இருந்து வருகிறது. தற்போது கூட வட கொரியாவில் கொரோனா நோய்த்தொற்று பதிவாக வில்லை என்று அந்நாட்டு அதிபர் அதிகாரப் பூர்வமாக செய்தி வெளியிட்டு வருகிறார். ஆனால் இச்செய்தியை அமெரிக்காவும் தென் கொரியாவும் தொடர்ந்து மறுத்து வருகின்றன. நேற்று அதிபர் கிம் ஜான் உன் பொலிபிட்ரோ கூட்டத்தில் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக் குறித்தும் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது குறித்தும் அதிபர் பேசியிருக்கிறார். பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ரசாயன தொழில் உற்பத்தியை ஊக்கப் படுத்துவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. மேலும, வட கொரியாவை பற்றி வெளியாகும் புகைப்படங்கள் அனைத்தும் கொரோனா நோய்த்தொற்று இருப்பதை உறுதிப்படுத்துவதாக சில சர்வதேச ஊடகங்கள் சந்தேகத்தை எழுப்புகின்றன.
இந்நிலையில் வட கொரியா, தென் கொரியாவோடு இருக்கும் அனைத்துத் தகவல் தொடர்புகளையும் முறித்துக் கொள்வதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து, வட கொரியாவின் அரசு செய்தி நிறுவனம், “செவ்வாய்கிழமை மதியம் முதல் தென் கொரியாவுடன் இருந்த அனைத்து தகவல் தொலைத் தொடர்புகளும் துண்டிக்கப்படும். தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்து, அந்நாட்டுடன் தேவையற்ற விஷயங்களிலிருந்து விடுவித்து இருப்பதே தற்போதைய தீர்மானத்தில் முதல் படி” என்று தகவல் தெரிவித்து உள்ளது.
முன்னதாக, வட கொரியா ராக்கெட் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக தென் கொரியா தொடர்ந்து விமர்சித்து வந்தது. இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறைமுகமாக வட கொரியாவை எச்சரிக்கை செய்தததோடு புதிய பொருளாதார தடையையும் விதித்து இருக்கிறார். ஆனாலும் கடந்த பிப்ரவரியில் மீண்டும் வட கொரியா ராக்கெட் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. கொரோனா நேரத்தில் நடைபெற்ற சோதனை என்பதால் உலக நாடுகள் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ள வில்லை.
கடந்த மாதததில் வட கொரியா எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியாவும் சில துப்பாக்கிக் குண்டுகளை சுட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்த எல்லைப் பிரச்சனையும் இல்லை என்றே கூறப்பட்டது. கிம் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்ட போதும், கொரோனா வட கொரியாவில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுகிற போதும் ஒவ்வொரு நேரத்திலும் தென் கொரியாவின் பங்கு அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வட கொரியா, தென்கொரியா வோடு இருக்கும் அனைத்துத் தகவல் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாக அறிவித்து இருக்கிறது. இனிமேல் மர்ம தேசத்தைப் பற்றிய அறைகுறை செய்திகளும் வெளியாகாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout